ஏழ்மையிலும் நேர்மை சிறியவனின் நேர்மைக்கு கிடைத்த கிரீடம்
முஹம்மது யாசினை போலீஸார் பாராட்டும் போது |
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் முஹம்மது யாசின் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யாஷினின் நேர்மையை வெளிக்கொணர ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது
கடந்த 11ம் தேதி பள்ளி செல்லும் பொழுது வழியில் 50 ஆயிரம் பணத்தை கண்டெடுத்தார் அதை தன்னுடைய ஆசிரியரிடம் ஒப்படைக்க அவர்கள் சிறுவனுடன் சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவிய இந்நிகழ்வை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, இந்நிகழ்வை கண்ட நடிகர் ரஜினிகாந்த் சிறுவனை நேரடியாக தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து அவனுக்கு தங்க சங்கிலி அன்பளித்து மேலும் அவனுடைய கல்வி செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
காவல் துறையும் யாசினுக்கு பாராட்டு விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்து வருகின்றது.
சிறுவனின் அந்த தன்னலமில்லா செயல் அவனை இன்று பல வெகுமதிகளை பெற்றுத்தந்து யாசினை உயரிய இடத்திற்கு கொன்று சென்றுள்ளது
மேலும் இந்நிகழ்வு இது போன்ற பல சிறுவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நம்புகின்றோம்